ஒற்றை பாதை (5)
பொம்மு என்னை பக்கத்து ஆற்றில் குளித்து விட்டு வருமாறு சொன்னான் , நேற்று இணையத்தில் வாசித்த நாகவல்லி நதியில் இன்று நீந்திக் கொண்டிருந்தேன்,குளித்துவிட்டு அந்த வீட்டில் காத்திருந்தேன் மேடத்தை சந்திப்பதற்காக ,நீ யார் என்று கேட்டால் என்ன சொல்லுவது ,நான் நிருபரும் அல்ல ,ஆராய்ச்சி மாணவனும் அல்ல ,புகைப்பட கலைஞன் என்றால் அனுமதிப்பார்களா? எவ்வாறு சொல்லலாம் என நீண்டு யோசித்து கொண்டிருந்தேன் .
அந்த மேடம் வந்தார்கள், கூடவே இரண்டு கொரியாக்காரர்கள் வந்தார்கள் அவர்களில் ஒரு நிருபர் மற்றுமொருவர் படம்பிடிப்பவர் ,ஆதிவாசி களின் பிரச்னைகளை படம்பிடிப்பதற்காக வந்திருக்கிறார்கள் .
பிரிதந்தினியா அவர்கள் மிகவும் எளிமையுடன் இறையிலாளராக இருந்தார் ,ஒரு பெரிய போராட்டத்தை வழி நடத்துகிறவர் இயல்பாக பேசிவந்தார் .நான் யோசித்து வைத்ததை எல்லாம் சொல்ல முயற்சிசெய்தேன் ,அவர் என்னிடம் என்னுடைய அடையாளங்கள் ,ஆவணம்,படிப்பு என எது குறித்தும் கேட்கவில்லை ,வாங்க கூட்டிச்செல்லுகிறேன் என்றார். 20 நாட்கள் எல்லாம் தொடர்ச்சியாக தங்க இயலாது என்றார் .அவரே பலாக்காய் உரித்து அதில் ஒரு உணவை சமைத்து பரிமாறினார் ,என்னால் அந்தச்சுவையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனாலும் முழுவதுமாக சாப்பிட்டு முடித்தேன் .
இரவில் மலையடிவாரத்தில் உள்ள கிராமத்திற்கு செல்லவதற்காக தயாரானோம் ,கொரியாக்காரர்கள் நிறைய தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்திருந்தார்கள்,எங்கள் அனைவர்க்ககுமான உணவு சாமான்கள் எல்லாம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது ஒரு மஹிந்திரா ஜீப் .
மெல்ல நகரம் கடந்து காடு வந்தது ,இருட்டில் காடு அலாதி ஆனந்தத்தையும் பதட்டத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தது தூரத்தில் வெளிச்சமாய் தென்பட்டது நெருங்க நெருங்க நெருப்பின் வெளிப்பாடாக இருந்தது ,மலையில் நெருப்பு தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது ,அதை யாரும் பொருபடத்தவில்லை , எப்பொழுதும் நடக்கும் விஷயமாக சாதாரணமாகத்தான் பார்த்தார்கள் .
மலையின் மீது ஆதிவாசிகள் விவசாயம் செய்வதற்காக நெருப்பிட்டு அழித்து பின் விவசாயம் செய்வார்கள் பின்பு வேறோரிடம் தேர்ந்தெடுத்து அங்கே செல்லுவார்கள் ,அவர்கள் ஒரே இடத்தில தொடர்ச்சியாக விவசாயம் செய்வதில்லை, என்றார் அருகிலிருந்த உதவியாளர்.
வண்டி ரோடை தாண்டி மண் பாதையில் சென்று ஒரு கிராமத்தை அடைந்தது , நட்சத்திர வெளிச்சத்தில் தூங்கிக்கொண்டிருத்தது அந்த மின்னொளி இல்லா மலை கிராமம் .ஊருக்கு வெளியே உள்ள ஒரு மண் வீட்டில் தங்கியிருந்தோம், போராட்டத்தை சேர்ந்த மக்கள் வந்து தந்குவதற்கான வீடு அது .கொரிய நண்பர்கள் அந்த இருளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கொசு வலை சகிதமாக தூங்கச்சென்றார்கள் . நாங்களும் தூங்கச்சென்றோம் .
அதிகாலை ,இரவில் பூமி வந்த விண்மீன்கள் மின்மினிகளாக சுற்றி கொண்டிருந்தன ,வானமும் பூமியும் வெள்ளையும் கருப்பும் கலந்து சாம்பலாக காட்சி அளித்தது .
நியாம்கிரி மலை ,கோந்த் இன ஆதிவாசிகள் ,பல ஆயிரம் வருடங்களாக தற்சார்பாக வாழும் மலை .அவர்கள் அந்த மலையை நியாம்ராஜா என்னும் கடவுளாக பாவித்துவருகிறார்கள். வேதாந்தா என்னும் mining நிறுவனம் இந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு அவர்கள் அலுமினிய தாதுக்களை எடுப்பதாக திட்டம்.. அந்த கம்பெனி ஏற்கனவே மலையடிவாரத்தில் பெரிய காடை அழித்து அதில் அலுமினியம் refinery ஆலை நடத்தி வருகிறார்கள் .அந்த தொழிற்சாலையின் பின் பகுதியில் திறந்து வெளியில் ,பெரிய மலை போன்று அலுமினிய கழிவுகளை கொட்டி வைத்திருந்தார்கள் யாருக்கும் தெரியாமல் அதை படம் எடுத்து கொண்டிருந்தோம்
,நானும் அந்த கொரியா தோழியும், ஆர்வ மிகுதியில் கம்பிவேலிகளின் எல்லையை கடக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம் .மேடம் எங்களை கத்தி அழைத்தார்கள் நான் திரும்பி வந்துவிட்டேன் .அந்த பெண்மணி வருவதாய் இல்லை .
சென்ற வாரம் தான் ஜெர்மனி சேர்ந்த நிருபரை அடித்து காமிராவையும் பாஸ்ப்போர்ட்டை யம் பிடுங்கிருந்தார்கள் வேதாந்தா ஆட்கள் ,அதனால் அந்த மேடம் பதட்டமாகவே இருந்தார் ,எங்களை பாதுக்காகவேண்டி பரிதவிப்பில் இருந்தார் .பின் ஒரு வழியாக வண்டியில் ஏறி விடிவதற்குள் வேதாந்தா எல்லையை தாண்டிவிட்டோம் .
.மலைப்பள்ளத்தாக்கை தாண்டி ஒரு ஒற்றை பாதையின் முடிவில் இருந்தது ஆம்குடா , மாமரங்கள் நிறைந்த கிராமம் என்று பொருள் .இரவில் பார்த்த நிலப்பரப்பு யாரோ வெளிச்சமிட்டு மாற்றிருந்தார்கள் ,இரவில் மின்மினிகளோடு பேசிக்கொண்டிருந்த கிராமம் பகலில் சூரியனோடு விளையாடிக்கொண்டிருந்தது .