பறப்பதுவே (6)

அந்த நீண்ட பாதை பள்ளத்தாக்கை கடந்து மேல வந்து பொழுது ,அந்த கிராமத்தின் எல்லை ஆரம்பிக்கிறது ,முதல் முறையாக  கிராமத்தை நோக்கி சொல்லுகிறேன் ,மக்கள் தூரத்தில் தெரிந்தார்கள், நான் நெருங்க நெருங்க மொத்த கிராமமும் உள்ளே சென்று விட்டார்கள்.எனக்கு  என்னவோ போல் ஆகிவிட்டது .பொதுவாகவே அந்நியர்களை சந்திப்பதே குறைவு என்பதால் வெளி மனிதர்களுடன் பழக தயங்குகிறார்கள் .நான் திரும்பிவந்துவிட்டேன் .

கொரிய  நண்பர்கள் ,மேடம் எல்லாம் சென்றுவிட்டார்கள் ,நான்,  பொம்மு, பாபு  ஒடிஷாவை சேர்நத்தவர் actionaid  ல் வேலை செய்பவர் ,அவரும்  எங்களோடு இருந்தார். அவரும் நானும் வண்டியில் கரண்ட் இருக்கும் கிராமம் தேடி அலைந்தோம் கேமரா பேட்டரி சார்ஜ் போடுவதற்காக ,ஒரு ஆசிரியர் வீடை கண்டுபித்து சார்ஜ்  போட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம்
மலைப்பாதையில் ,  காய்ந்த வெளியில் நடுவே  ஒரு பெரிய வயதான அரச மரம் அதனின் கீழே சிறுவர்கள் மரத்தை பார்த்தபடி காத்திருந்தார்கள்,திடிரென்று அடித்த காற்று ,இலையுதிர்கால இலைகள் ,காற்றோடு பறந்து கீழே இறங்க ,காற்றோடு சேர்ந்து சிறுவர்கள் பறந்தும் தவ்வியும் அந்த இலைகளை பிடித்தபடி மகிழ்ச்சியில் சிறு நடனமும் ஆடிக்கொண்டிருந்தார்கள் .தாத்தாவும் பேரனும் பந்து பிடித்து விளையாடுவது போல் இருந்தது .

இவ்வுலகிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் ஆதிவாசிக்குழந்தைகள் தான் ,அவர்களை போல காட்டில் உலவ ,பழங்களை  பறிக்க, ஆறுகளை குளிப்பாட்ட  , மரங்களை ,ஆடு மாடுகளுடன் உறவாட,இரவுகளில்  கதைக்குள் ஒளிந்துகொள்ள  ,...காட்டுசிறுவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் .

குழந்தைகளுக்காக கொஞ்சம்  biscutum  சாக்லேட்டும் வாங்கிவைத்து கொண்டேன்  சாயங்காலம் மெல்ல கிராமத்திற்கு செல்லுகிறேன் ,நான் நெருங்கியவுடன் பெண்கள் உள்ளெ சென்றுவிட்டார்கள் , தூரத்தில் ஆண்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள் , சிறுவர்கள் ,நான்கு ஐந்து குச்சிகளை  ஸ்டம்ப் ஆக  நட்டு வைத்து  கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்தார்கள் . கரண்ட் இல்லாத கிராமம் அது ஆனால் கிரிக்கெட் வந்து விட்டது ,வெளியே  படிக்க செல்லும் சிறுவர்கள் அங்கே உள்ள கிரிக்கெட் கற்று கொண்டு வந்துவிட்டார்கள்  என நினைக்கிறன்    .அங்கே சென்று அமர்ந்துகொண்டேன் ,சற்று நேரம்  சென்ற பிறகு யாரோ அடித்த பந்து என்ன நோக்கி வந்தது .பந்தை எடுத்து வைத்து கொண்டேன் சிறுவர்கள் என்னை சூழ வினோதமாக பந்தைவீச அவர்கள் சிரித்து விட்டார்கள் ,பின் எறிவதும் பிடிப்பதுமாக சற்று  பழகி விட்டிருந்தோம் .
எங்களினூடே இருந்த ஒரே மொழி புன்னகைமட்டும் தான் ,அது தொடர்புபடுத்திய எண்ணங்கள் ஆயிரம் மொழிகளை கடந்தவை .நான் விளையாடியதை பார்த்து அந்த சிறுவர்கள்  பழக ஆரம்பித்தார்கள்.அங்கே இருந்த  சிறுமிகளும் பெண்களும்  வீட்டு வாசலில் நின்றபடி சிரித்துக்கொண்டு இருந்தார்கள் .

ஊரே உங்கள பார்த்து சிரிச்சா நம்ம சந்தோசப்படுவோமா ? நான் சந்தோசமா இருந்தேன் .

Leave a Reply

Your email address will not be published.