வழித்துணை (3)

மெட்ராஸ் சென்ட்ரல் ,கேமரா வைக்க,துணிவைக்க  எல்லாம் சேர்த்து ஒரு பையோடு வரிசையில் நின்று இருந்தேன், போலீஸ்  செக்க்கப் செய்தது,  கார்டு எல்லாம்  காண்பித்து  உள்ள  வந்தாச்சு. ரயில் நகர்கிறது , இந்திய ரயில்கள் எப்பொழுதும் ஒரு கிராமத்தை,மலையை ,கடலை,சைக்கிளை ,சாமியார்களை ,பிச்சைக்காரர்களை,பால் கேன்களை ,அடுப்புகளை, நதிகளை   தூக்கிச்செல்லும் , வாகனம்,இப்படி எல்லா மக்களுக்குமான நிலப்பரப்புக்குமான ஒரு வாகனம் , வேறோர் தேசத்தில் இருக்குமா என்று தெரியவில்லை.
ரயில் நகர நகர பக்கத்தில் இருந்தவை  எல்லாம் தூரமாகியது .மனம் மெல்லிசாகிருந்தது. பக்கத்தில்  ஒருவர் நண்பராகிக்கொண்டிருந்தார் ,அவர் பெயர் கல்யாணசுந்தரம் அவரும் நான் இறங்கவேண்டிய அதே chatrapur ல் இறங்க வேண்டியவர் அங்கே இருக்கும் பெரிய ஆலை ஒன்றில் வேலை சொல்லுவதாக சொன்னார் .அப்படியே பேசிக்கொண்டிருந்தோம்,நமது தனிப்பட்ட வாழ்க்கையை,யாரோ தெரியாத  மனிதன் ஒருவனிடம் தீராமல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இரவில் ஆரம்பித்த பயணம் பகல் கடந்து, வேடிக்கை பார்த்து கடந்தது .அந்தி சாயும் நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய சிறு நகரத்தின் பாவனைகள் தெரிய ஆரம்பிக்க நாங்கள் இறங்க தயாரானோம் .ரயில், நிலையத்தில் நுழைந்ததது .அங்கிருந்து  வெளியில் வந்து ஒரு தேநீர் அருந்தினோம் ,அப்பொழுது முழுவதுமாக  உணர்த்திருந்தோம் நாங்கள் வேறொர்தேசம் வந்து விட்டோம் என்று .
அங்கே ரபீந்தர் அவர்களுக்கு போன் செய்தேன் அவர் ஆட்டோ பிடித்து வரச் சொன்னார் . ஆட்டோ வில் மக்கள் கூட்டமாக ஆமர்ந்திருந்தார்கள் நானும் நண்பரும் அமர்ந்து கொண்டோம் .நீண்ட நேரமாகியும்  நாம் இறங்க வேண்டிய இடம் வரவில்லை என்றவுடன் சற்று மனம் சலனமானது அங்கே இருக்கும் நபர் தூங்கிருப்பாரோ ? தூங்கினால் எப்படி எழுப்புவது ? என யோசனைகள் .கொஞ்ச நேரத்தில் நண்பர் இறங்கிக்கொண்டார் .
கஞ்சம் தாண்டி புராணபந்தா செல்ல வேண்டும் , கடற்கரை கிராமம், முதல் முறையாக ஒரு  ஊருக்கு செல்லும் போது இரவில் செல்ல வேண்டும் என்பது அப்பொழுதான் விளங்கியது இருட்டில் அமைதியாக தூங்கும் கிராமத்திற்குள்  செல்ல செல்ல மேல்வெளிச்சங்கள் ,அடர் இருட்டுகள் ,ஆழ் சப்தங்கள் ,தூரத்து நாய்களின் குரல்கள் ,மாட்டின் மணியோசைகள் ,என ஒரு கிராமம் மங்கலாக புரிய ஆரம்பிக்கிறது .
ரபீந்திரனை தேடி அங்கே விசாரித்து சென்று விட்டேன் ,அவர் வந்தவுடன் பெரிய விசாரிப்புகள்  எதுவும் இல்லாமல் ஒரு சிறு அறையில் தங்க வைத்து விட்டு ,அவர் உணவு வாங்க சென்று விட்டார் மனிதர்கள் ஒரு சிறு சந்தேகம் இல்லாமல் நம்மை மனப்பூர்வமாக நம்புகிறார்கள் .
கடல் அலை தூரமாக கேட்டுக்கொண்டு இருந்தது .கிராமத்திலிருந்து  சற்று தொலைவான இடம் .ரபீந்திரன் உணவு கொண்டு வந்தார் கூடவே இரண்டு மூன்றுபேர் வந்தனர்.சாப்பிட்டவுடன் கடலுக்கு செல்ல தயாராகிவிட்டோம் .அது நீண்ட கடற்கரை அவர்களுடன் நானும் நடக்க ஆரம்பித்துவிட்டேன்.யாருடனாவது  நட்பாக  வேண்டும் என்றால் அவர்களுடன் இரவை கழியுங்கள் ,அவர்கள் நெருக்கமான மனிதர்களாக மாறி இருப்பார்கள் .
இரவு செல்ல செல்ல அமைதியான கடல், குளிர்ச்சியான காற்று ,சிறு வெளிச்சம்,புதிய நட்புகள் என சூழல் ரம்மியமாக இருந்தது .நீண்ட பயணத்திற்கு பின் ஒன்றிரண்டு ஆமைகளை பார்த்தோம் ,யாருமாறிய காலத்தில் அவை வந்து சென்று கொண்டிருந்தன . நாடு நிசி கடந்து தாண்டி சில காலம், பெருங்கூதல் வீசியது , பெருங் கூட்ட ஆமைகள் வந்து செல்வார்கள் என காத்திருந்தோம் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
எதுவுமே தோன்றாமல் ஓர் இரவு கடந்தது
வெளிச்சம் வர வர எங்களது அறைக்கு வந்துவிட்டோம் சிறு ஓய்வுக்கு பின் . மெல்ல புலப்படுகிறது வெளிச்சத்தில் அந்த கிராமம் ,இரவில் பார்த்த கிராமம் கனவில் வரும் காட்சியாக இருந்தது ,வெளிச்சம் வேறோர் வடிவத்தில்வடித்து  இருந்தது.
நான் தங்கி இருந்தது ஒரு NGO  வின் அறை ,அவர்கள் கடல் ஆமைகளை இரவில் தேடி அவைகளை கணக்கிட்டு
பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள் .எங்களை மாதிரிவரும் பயணிகள் புகைப்பட கலைஞர்கள் வழக்கமாக தங்கிச்செல்வர்களாம்.
வெளிச்சத்தில் ஒவ்வொரு  முகமாக தெரிகிறது ரபீந்திரன் ஒல்லி யாக வளர்ந்த மனிதன்,மகதா ,பிப்ரோ , மிண்டோ அதில் ஒருவருக்கு தமிழ் கொஞ்சம் தெரிந்திருக்கிறது ,அவர்கள்  தமிழ் நாட்டில் வேலை செய்தகாலத்தில் கற்று கொண்டது .இவர்கள் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆமை வருகின்ற காலங்களில் மட்டும் இந்த பணியில் ஈடுபடுபவர்கள் .
இரவில் கடலில்  அலைவது பகலில் கிராமத்தில் அலைவது  .இரவில் நடப்பது ஒண்டிரண்டு ஆமைகள் பார்ப்பது என திரும்பி வந்து இருந்தோம் .flash அடித்து படம் எடுக்க  மனம் ஒப்பவில்லை   கேமரா வைத்து இருப்பேன்.பெரும்பாலும் எடுக்க மாட்டேன் .இப்படியாக சென்றது ஒருவாரம்.
ஒரு நாள் பக்கத்து கிராமத்து திருவிழா நாங்களும் செண்டிருந்தோம்,சற்றுவினோதமாக இருந்தது .இராமாயணம் நடத்தினார்கள் ,இராவணனனும் இராமனும் நாடகமாடிக்கொண்டு இருந்தார்கள் .தீடிரென்று வானத்தை நோக்கி பார்த்தார்கள் இரு மரங்களின் மேல் கட்ட பட்டிருந்த கயிறின் வழியாக கழுகு வேடம் தரித்து தொங்கியபடி இரவணனிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.மக்கள் அனைவரையும் வணங்கியபடி பார்த்துக்கடந்தார்கள்.
புவனேஸ்வரிலிருந்து சந்தன் வந்திருந்தார் (couchsurfing )அவரும் எங்களுடன் கடற்கரையில் நடந்து களைத்திருந்தார்.சரி வாங்க புவனேஸ்வர் போகலாம் ,ஆமைகள் வந்தால் திரும்பிவரலாம் என்றார் .சரியென பட்டது கிளம்பிவிட்டோம் .
மகதாவிடம்  சொல்லிருந்தேன்  எப்பொழுது ஆமைகளை  பார்த்தாலும் உடனே போன் செய்  எங்கேயிருந்தாலும் வந்துவிடுவேன்  என்று.
unreserved ரயில்  பயணம் ,சரியான கூட்டம் பெருநகரங்களை நோக்கிய கூட்டம் ,தொங்கியபடி சிறிது தூரம் சென்று, சற்று இடம் கிடைத்துஇருந்தது , பை கிழிந்து தொங்கியிருந்தது  ஒரு கையில்லாமல் இனி பயன்படுத்தவே முடியாத அளவிற்கு அவை தேய்ந்து இருந்தது .பல நேரங்களில் ,தேசங்களில் என்னோடு அலைந்தவன் ,அவனை வழியில் விட மனமில்லை ,நண்பர் அவரது பை ஒன்றை கொடுத்தார் அதில் இந்த பையையும் வைத்துக்கொண்டேன்...

Leave a Reply

Your email address will not be published.