கடற்பயணி…(1)

நீலாங்கரை கடற்கரை இரவு பதினோரு மணி வாக்கில் கடல் பயணிகளை தேடி அலைந்து கொண்டிருந்தோம் நானும், (Rajaram Gomathinayagam )ராஜாராமும், (Enfielder என்ஃபீல்டர்)அழகிரி ,பின்பு ஒரு சின்ன கூட்டமும். அது ஒரு இரவாடிகளின் நீண்ட தேடல், நீலாங்கரை கடலோரத்தில் இருந்து பெசன்ட் நகர் வரையிலான தேடல் கடைசியில் விடிவதற்கு சற்று முன்னால்இருட்டின் ஊடாக கடல் அலையை தாண்டி ஒரு மெல்லிய நடமாட்டம் ...ஒரு கடல் ஆமை நகர்ந்து கடலை விட்டு எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டுஇருந்தது .
என் வாழ்வில் நான் பார்த்த மிக முக்கியமான பயணி, சர்வ நிதானத்துடன் எந்த சலனமுமில்லாமல் வந்து பள்ளம் தோண்டிமுட்டையிட்டு அதே நிதானத்துடன் கடலில் இறங்கி காணாமல் போய்விட்டார் .அசைவில்லாமல் பார்த்த நாங்கள் அவரது வழித்தடங்களை தொடர்ந்து எங்கே முட்டையிட்டு சென்றாரோ அதை எடுப்பதே எங்களது வேலையாக இருந்தது.
முட்டையை தொடும் பொழுது சூடாக கொழ கொழ வென இருந்தது. குறைந்தது நூறு முட்டைகளுக்கு மேல் கூடையில் எடுத்துக்கொண்டு இருட்டை நோக்கி நகர்கிறோம் .
இந்த ஆமைகளின் பெயர் Olive ridley sea turtle வங்காள விரிகுடா கடலில் வாழும் ஆமைகள் பெண் ஆமை மட்டும் நிலத்திற்கு வந்து தான் எந்த நிலத்தில் பிறந்தோமோ அதே இடத்தில் வந்து முட்டையிட்டு செல்லும் .இந்த முட்டைகள் 45நாட்களுக்கு மேல் குஞ்சு பொரியும் ...இரவில் வெளியே வரும் ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி தனது வாழ்வை ஆரம்பிக்கும் .
அதன் உள்ளுணர்வில் இரவில் மின்னும் வெளிச்சமே கடல் இருக்கும் பகுதி அந்த நினைவில் வெளிச்சத்தை நோக்கி நகரும். நமது நகரத்தின் வெளிச்சம் இதன் பாதையை மாற்றி நகரத்தை நோக்கி வர வைத்துவிடுகிறது ...இதனால் மனிதர்களின் வண்டிகளின் கால்களில் பட்டு இறந்துவிடுகிறது.
இதை தடுக்கவே அருண் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டம் தொடர்ச்சியாக இருவது வருடங்களுக்கு, மேலாக இதை செய்கிறார்கள். முட்டைகளை எடுத்து சென்று இருட்டான இடத்தில் புதைத்து விடுவார்கள் .அவை வெளியே வரும் நாளில் இரவின் இயற்கை வெளிச்சத்தில் தனது வாழ்வை தொடரும்.
உள்ளுணர்வால் ,இப்படி ஒரு நாளில் ஆரம்பித்த பயணம் என்னை தூரதேசத்திற்கு இட்டு செல்லும் என்பது எனக்கு அப்போது தெரியாது ...
-#யாத்ரீகன் Yaathrigan
(தொடர்ந்து செல்வோம் )

Leave a Reply

Your email address will not be published.