தூரதேசம் (2)
சில மனிதர்களை சந்தித்த பின் நமது வாழ்க்கை வேறோர் பாதையில் செல்ல ஆரம்பிக்கும் . அப்படியாக எனக்கு கிடைத்த அண்ணன் மதுரை செந்தில் (அண்னே ), Senthil Kumaran அப்பொழுது எனக்கு அவர் அறிமுகமாக வில்லை ,அவரது காசியில் எடுத்த புகைப்படங்களை flickr ல் பார்த்துவிட்டு மிரட்சியாக போன் செய்தேன் , உங்கள பார்க்கணும்னு சொன்னேன் உடனே வரச்சொன்னார் .அவர் வீட்டுக்கு போய் போட்டோகிராபி பத்தி பேச ஆரம்பிச்சோம் நேரம் போனதே தெரியல ப்ரெஸ்ஸோன், அங்கோர்வாட் ,யானை ,கடல் ,தமிழ், ஈழம் பிரபாகரன் னு நிறைய பேசினோம் நேரம் போனதே தெரியல, அன்னைக்கு அவர் வீட்ல தான் சாப்பாடு, அப்போதே அவர்கள் வீட்டில் ஒருவனாக மாறி இருந்தேன் . அந்த அன்பு வழிகாட்டல் இப்பொழுதும் தொடர்கிறது.
நீண்ட காலம் எதிலும் மனம் லயிக்காத காலகட்டம் , ஒரு மாறுபாடு இல்லாத நாளில் அருண் (கடல் ஆமை/மருதம் பள்ளி ) அவர்களிடமிருந்து போன் வருகிறது. வழக்கமாக நான் தான் அவர்க்கு நான் போன் செய்து நச்சரிப்பேன் கடல் ஆமைகளின் வருகையை அறிவதற்காக .
பெண் கடல் ஆமைகள் லட்ச கணக்கில் கூட்டமாக கடற்கரையோரம் வந்து முட்டை இட்டு செல்லும். இரவில் சூரியஉதயத்திற்கு முன் சென்று விடுவார்கள் .ஏப்ரல் மே மாதங்களில் கடலில் பெரிய அலைகள் உருவாக்கக்கூடிய காலம் தான் இவர்கள் வருவதற்கான அறிகுறி .உலகத்தில் இந்த மாஸ் நெஸ்டிங் (arribadas) வங்கக்கடற்கரையில் ஒடிசாவில் ,coasta rica ,மெக்ஸிகோ வில் மட்டுமே நடக்கிறது . இந்த தகவலை அருண் எனக்கு நீலாங்கரை நடை பயணத்தின் போதே சொல்லி இருக்கிறார் . அப்போதிலிருந்தே இந்த ஆமை கூட்டத்தை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் உருவாயிருந்தது.
ஒடிசாவில் பெரிய கடல் அலைகள் வந்த தகவல்களை அருண் கூறினார் .அங்கே அவருக்கும் ஆட்களை நேரடியாக தெரியவில்லை ...ரபீந்திரன் ஒருத்தர் நம்பர் தரேன் உங்களுக்கு ஹிந்தி தெரியும்ல நேரா பேசுங்க னு சொன்னார் .நானும் அந்த எண்ணிற்கு அழைத்தேன் எனக்கு தெரிந்த ஹிந்தியில் ஏதொ பேசினேன்..அவரும் வாங்க பார்த்துக்கலாம்னு சொன்னது போல இருந்தது.
எந்த ஊர் , பாஷை , மனிதர்கள் யாரையும் தெரியாது , அனால் ஒரு அழைப்பு கேக்கும் பொழுது செல்ல வேண்டியது தான்.
செந்தில் அண்ணனிடம் சொன்னேன் உடனே ஒடிஷா விற்கு டிக்கெட் போட்டு விட்டார் .பயணத்திற்கு கோகுலிடம் 5000 பணம் வாங்கி இருந்தேன்,இப்ப வரைக்கும் அதை நான் அவருக்கு தரவில்லை ஆனாலும் அவர் கேட்பதாய் இல்லை .
facebook பேமஸ் ஆகாத காலகட்டம் அது ... couchsurfing வழியாக ஒடிசாவில் யாரேனும் தங்குவதற்கு உதவுவார்களா எனத்தேடினேன் , இதுவரைக்கும் பல பேருக்கு அனுப்பிய கடிதத்திற்கு எந்த பதிலும் வந்ததேயில்லை .ஆனால் அன்று காலை அனுப்பிய கடிதத்திற்கு மதியமே பதில் வந்தது . அவர் வேளாண் கல்லூரி மாணவர் இந்த ஆமை கதைகளை கேட்டவுடன் ஆர்வம் ஆகிவிட்டார் ,புகைப்படங்கள் எடுப்பவர் என்பதால் அவரும் வருகிறேன் என்றார்.அனால் அவர் புவனேஸ்வரை சேர்ந்தவர் அதற்கும் நான் செல்லும் இடத்திற்கும் ஒரு நாள் தூரம் இருக்கும,.என்றாலும் வருகிறேன் என்றார்.நம்பிக்கையாக இருந்தது.
முகம் தெரியாத மனிதர்கள் எப்பொழுதுமே உதவ காத்திருக்கிறார்கள் கைகளை நீட்டியபடி நாம் தான் அவர்கள் கைகளை பிடிக்கிறோமோ இல்லையா என்பது தெரியவில்லை.
செந்தில் அண்னே தூரதேசம் சொல்லுகிறாய் உனக்கு எந்த அடையாள அட்டையும் கிடையாது இரு என்று சொல்லிவிட்டு அவரே பூவுலகின் நண்பர்கள் மாத இதழுக்கான புகைப்படகலைஞர் மாதிரி id கார்டும் விசிட்டிங் கார்டும் தயார் செய்து கொடுத்தார் .
பூவுலகின் நண்பர்களில் ஒருவரான Rajaram Gomathinayagam ராஜாராமிடமும் ஒரு வார்த்தை சொல்லி இருந்தேன் . அவர் எனக்காக வெறும் பேப்பரில் அவர் கையெழுத்திட்ட லெட்டர் ஹெட்ஒன்றை எடுத்து தந்தார் . நான் நினைத்தேன் இதெல்லாம் நமக்கு எங்கே பயன் பட போகிறதென்று ? என நினைத்திருந்தேன் . பல இடங்களில் என்னை மீட்டு எடுத்துவந்தவை இந்தஅன்பினால் ஆன பேப்பர்கள் தான்.பின்னாளில் எனது புகைப்படங்கள் இதே இதழில் வெளியாகும் என அப்போது நான் நினைத்து பார்க்கவில்லை .
போன் வந்த இரண்டாவது நாளே கிளம்பிவிட்டேன் கடல் ஆமைகளை தேடி ஒடிஷாவின் எங்கேயோ இருக்கும் கடற்கரை கிராமத்திற்கு...
-#யாத்ரீகன் Yaathrigan
(தொடர்ந்து செல்வோம் )