பிரபஞ்ச பாஷை (4)
புவனேஸ்வர் சந்தன் அவரது கல்லூரி விடுதி அறை ,அவர் பரபரப்பாக இருந்தார் . காலேஜ் சென்று வருவதாகவும் ,மதியத்திற்கு மேல் வெளியே செல்லலாம் என திட்டம் .
எனக்கு என்ன செய்வது என அறியாமல் இருந்தேன் ,ஆமைகளை யும் பார்க்க முடியவில்லை செந்தில் அண்ணனுக்கு போன் செய்தேன் ,அப்பொழுது அவர் சொன்னார் இவ்வள்வு தூரம் போய்ட்ட photostory எதுவும் பண்ணாம திருப்பி வராதேனு? சற்று கண்டிப்பா சொன்னார் .அப்புறம் நாதன் சொன்னார் என்று டோங்கிரியா கோந்த் னு ஆதிவாசி மக்கள் இருகாங்க ,அவங்கள பத்தி தேடுன்னு சொல்லிட்டு வைச்சிட்டார். அப்ப அவன் ரூம்ல இருந்த இன்டர்நெட்ல தேட ஆரம்பித்தேன் .
கோந்த் இன மக்கள் ஒடிசாவின் நியாம்கிரி மலையின் மீதும் அதனை சுற்றியும் ஆயிரம் நூற்றாண்டு முன்னமாகவே வாழ்கிறார்கள் .வேதாந்த என்னும் british mining கம்பெனி இந்திய நிறுவனங்களுடன் கூட்டமைத்து அந்த மலையில் அடிவாரத்தில் காடுகளை அழித்து ,கம்பெனி ஆரம்பித்துஇருக்கிறார்கள் .மேற்கொண்டு மலை மீது இருக்கும் அலுமினியம் தாதுக்களை எடுக்க அங்கே இருக்கும் ஆதிவாசிகளை வெளியேற்றிவிட்டு மலைகளை வெட்டுவது என திட்டம் .இந்த கம்பனியை எதிர்த்து தொடர் போராட்டம் நிகழ்த்தி வந்தார்கள் அந்த மக்கள்.அவதார் படத்தில் வருவதை போலவே இருந்தது .
அந்த மக்களின் போராட்டத்தில் actionaid சேர்ந்த britandinijana என்பவரும் போராடி வருகிறார்.இந்த NGO வின் தலைமையகம் புவனேஸ்வரில் இருந்தது அந்த இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்துவிட்டோம் நானும் நண்பரும்.
Britandini jana மேடம் அவர்களை சந்திக்கவேண்டும் என்றேன் ,அவர்கள் நேற்று தான் ஆதிவாசிகளின் கிராமத்திற்கு சென்றார் என்றார்கள் ,நீங்கள் வேணும் என்றால் போனில் பேசுங்கள் என்றார்கள் நானும் போனில் அழைத்து பேசினேன் சரி வாங்கனு சொல்லிட்டாங்க .
உடனே தயாராகவேண்டிய சூழல் எதுவுமே யோசிக்கவில்லை ,raygada புவனேஸ்வரில் இருந்து ஒரு இரவு தூரம் ரயில் டிக்கெட்டை செக் செய்து பார்த்தால் ஒரே ஒரு சீட் தான் இருந்தது ,ஆனால் கூட்டமோ பெருங்கடல் போல் இருந்தது டிக்கெட் கவுண்ட்டர்ல ,எதாவது வழி இருக்கானு தேடுனப்ப ஒரே ஒரு கவுண்ட்டர் மட்டும் கூட்டம் இல்லாம வயசானவங்க நின்னுகிட்டு இருந்தாங்க ,நானும் போய் நின்னுக்கிட்டேன். எனக்கு முன்னே இருந்த வயதானவர் நகர எனது டிக்கெட்க்கு காசை நீட்ட டிக்கெட் கொடுப்பவர் கோபமாக நீங்க என்ன வயசனவரா என்றார் இல்லைங்க நான் ரிப்போர்ட்டர் என்றேன், மேல இருந்த போர்டை பார்த்த படி அங்கே வயதானவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தனி கவுண்ட்டர் என எழுதி இருந்தது .எனக்கு தெரிந்த வரையில் வேறு எந்த ரயில்நிலையத்திலும் இப்படி ஒரு போர்டை பார்த்ததில்லை .
நாம் தயார் செய்து வைத்த, Id கார்டை பார்த்தவுடன் ஒன்னும் சொல்லவில்லை உடனே கொடுத்துவிட்டார். அதிகார உலகம் அட்டைகளை அதிகமாக நம்புகிறது மனிதர்களைவிட. (தவறுதலாக ,அந்த id கார்டு டிசைனில் எந்த கைஎழுத்தும் போடவில்லை,அதை யாரும் கவனிப்பதாக தெரியவில்லை )நமக்காகவே காத்திருந்தது போல இருந்தது அந்த ஒற்றை டிக்கெட்.
நானும் ரயிலுமாக பயணம் செய்து கொண்டிருந்தோம் ,என்னுடன் ரயில் பெட்டியில் வேறொருவர் அமர்ந்து இருந்தார், சற்று பேசியபின் தெரிந்தது அவர் ஆசிஷ் ,மருத்துவப்பணி தொடங்குவதற்காக முன்னிகுடா என்னும் கிராமம் செல்லுகிறார் .அங்கே ஒரு அழகுப்பெண் ஒருத்தியும் அமர்ந்திருந்தாள் குடும்பத்துடன்.பதினைந்து நிமிடம்தான் அமர்ந்திருப்பாள் என்னை ஏதோ செய்துவிட்டு சென்றிருந்தால் .ராய்கடா ரயில்நிலையம் வந்த பின் அவளும் கண்ணில் தென்பட்டால் ,அவள் தலைக்குமேல் ஒரு விசேஷமான துணி அணிந்திருந்தால் .என்னவென்று ஆசிஸிடம் கேட்ட பொழுது அவள் மணப்பெண்ணாக போகிறாள், அதற்காகத்தான் செல்லுகிறார்கள் என்று. எங்கிருந்தாலும் வாழ்க .
ராய்கடா பேருந்து நிலையம் ,நீண்ட நேரகாத்திருப்புக்கு பின் கல்யாண்சிங்க்பூர் போகும் பேருந்தில் அமர்ந்து கொண்டேன் ,வாழ்க்கை அப்படியே பின்னோக்கி பயணிப்பது போல இருந்தது.ஆதிவாசிகள்,கிரமத்து மனிதர்கள்,நகரத்தையும் கிராமத்தையும் இணைக்கும் ஆசிரியர்களும் என நீண்ட தொடர்ச்சியாக இருக்கிறது இந்தபேருந்து பூ கட்டிக்கொண்டு விற்கும் கிராமத்து சிறு பெண்,அதை வாங்கி பக்தியுடன் சாமி படத்திற்கு போடும் டிரைவர் ,உரிமையுடன் சங்கோசம் ஏதும் இல்லாமல் அருகில் அமரும் பெண்கள் .என பயணம் வெவேறு மனிதர்களை அறிமுகப்படுத்தி வைத்து கொண்டு இருந்தது .கண்டக்டர் பணம் வாங்கிக்கொண்டார் டிக்கெட் எல்லாம் கொடுக்கவில்லை .
ஜே,கே பேப்பர் மில்ஸ் என்று பெயர் பொறித்த பெரிய சட்டை போட்டிருந்த கிராமத்து தாத்தா ,அன்பாய் சிரித்தார் ,அவர் புகைக்க அழகாக போயிலை போட்டு சுருட்டு போல் செய்திருந்தார் ,அவரிடம் அவரை எடுத்த புகைப்படத்தை காண்பித்த பொழுது சிரித்த சிரிப்பு இன்னும் என் கேமராவில் தங்கி இருக்கிறது .
கல்யாண்சிங்ப்பூர் வந்துவிட்டோம் ,வெளியூர் வந்தவுடன் நேரடியாக தேநீர்கடை சென்று இளைப்பாறிவிட்டுத்தான் நமது தேடலை தொடங்குவது வழக்கம் ,அருமையான டீயும் அதனுடன் சாப்பிட்ட சின்ன வடை போன்றதொரு உணவும் நிறைவாய் இருந்தது .
அந்த அலுவலகத்தில் சொன்னது பாஞ்சுக்குடி என்ற வார்த்தை வைத்து தேடிக்கொண்டிருந்தேன் ,அது ஆள் என்று தான் நினைத்து தேடிக்கொண்டிருதேன் அந்த நகரம் ஒடிசாவில் உள்ள ஒரு சிறு நகரம் அங்கே ஹிந்தி மொழி அவ்வளவு பரிச்சயம் இல்லை,எனக்கு துளி ஓடிஷா பாஷையும் தெரியாது . ஒரு கடையில் இருந்த தாத்தா பாட்டியிடம் எனக்கு தெரிந்து ஹிந்தியில் விசாரித்தபொழுது ,இங்க யாரும் போட்டோ வாங்க மாட்டாங்க நீங்க கிளம்புங்க னு சொன்னாங்க , நான் போட்டோவிக்க வரலைங்க அவங்ககிட்ட சொல்லி புரிய வைக்க முடியல . அவருக்கு காது வேற சரியா கேக்கல ,தெரியாத மொழியில சத்தமா பேசரப்ப நமக்கே வெட்கமா இருக்கு ,இப்படி கொல்றோமேனு . இவ்வளவு போராட்டத்துக்கு அப்பறம் பார்த்தா நான் தேடுன இடம் அந்த கடைக்கு பக்கத்து வீடு தான் .அது பஞ்சாயத்து ஆபீஸ்.
அங்கே ஒரு ஆதிவாசி சிறுவன் அமர்ந்திருந்தான் அவன் பெயர் பொம்மு,எனக்கு தெரிந்த பாஷை எதுவும் அவனுக்கு தெரியவில்ல அவனுக்கு தெரிந்த பாஷைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை, நாங்கள் இருவரும் பேசிகொண்டுஇருந்தோம் இரண்டு மணி நேரமாய் .அந்த மேடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்கள் என்பது புரிந்தது
ரஸவாதியில் (the alchemist ) ஒரு வாசகம் வரும் நீங்கள் கேக்க தயாராக இருந்தால் பிரபஞ்சம் உங்களிடம் பேசும் என்று ,
அந்த சிறுவனும் பிரபஞ்சத்தின் பாஷையைத்தான் கத்துக்கொடுத்து கொண்டிருந்தான் .